புரெவி புயல் சேதம்: 3 மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று சுற்றுப்பயணம்….!!

29 December 2020, 8:25 am
purevi setham - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக வந்துள்ள மத்திய குழுவினர் இன்று ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நேற்று தமிழகத்திற்கு வந்தனர். மதுரை விமான நிலையத்தில் வந்த அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
தமிழக அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய அவர்கள், இன்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் புயலினால் பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை ஆலங்குடிக்கு புறப்படுகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடுகின்றனர்.

பின்னர் அங்கிருந்து மத்திய குழுவினர், புதிய மாவட்டமாக உதயமான மயிலாடுதுறைக்கு செல்கின்றனர். மயிலாடுதுறை, கொள்ளிடம், ஆகிய இடங்களில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள், குடிசைகளை பார்வையிடுகின்றனர். அதன் பிறகு கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்குச் செல்லும் மத்திய குழுவினர், சேதமடைந்த பயிர்களை பார்வையிடுகின்றனர்.

பின்னர் நாகப்பட்டினத்திற்கு வந்து அங்கு இரவில் தங்குகின்றனர். நாளை காலை 8.30 மணிக்கு நாகை மாவட்டம் கீழையூர், கீழ்வேளூர் ஆகிய இடங்களுக்கு புறப்படுகின்றனர். அங்கு காலை 10.30 மணிவரை புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்க்கின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு செல்கின்றனர்.

அங்குள்ள திருத்துரைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலும் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடுகின்றனர். அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 5.30 மணிக்கு வந்தடைகின்றனர். திருச்சியில் இருந்து டெல்லிக்கு இரவு 7.30 மணிக்கு புறப்படுகின்றனர்.

Views: - 1

0

0