மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க முடியாது : கைவிரித்த மத்திய அரசு..!

15 September 2020, 4:43 pm
Parliment 01 updatenews360
Quick Share

டெல்லி : போதிய வரி வசூல் ஆகாததால் மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வரி முறைக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, குறிப்பிட்ட இடைவேளையில் மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்து வந்தது.

தற்போது, கொரோனா பரவல் சூழலில் தடுப்பு நடவடிக்கைக்காக பெரும் நிதி மாநில அரசுகளுக்கு தேவைப்படுகிறது. ஆனால், உரிய நேரத்தில் மத்திய அரசு, ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விடுவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

அதில் கூறியிருப்பதாவது :- கடந்த ஏப்., முதல் ஜுலை மாதம் வரையில் மாநில அரசுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க வேண்டியிருக்கிறது. மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, நிதியை வழங்க முடியவில்லை. ஜி.எஸ்.டி. வசூல் குறைவாக இருப்பதால், தற்போது கொடுக்க முடியாது. இதுபோன்ற நெருக்கடியான காலத்திலும் இழப்பீடு கொடுக்க வேண்டுமா..? என்ற சட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்திற்கு சுமார் ரூ.11,600 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0