உலுக்கி எடுக்கும் கொரோனா..! செங்கல்பட்டு 12000…! வேலூர் 5000…!

25 July 2020, 10:21 am
Madurai Corona Patient -Updatenews360
Quick Share

சென்னை: செங்கல்பட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று கொஞ்சமும் குறையவில்லை. நாளாக, நாளாக பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது. கடந்த ஒரு வாரமாக பாதிப்பு நாள்தோறும் 5000ஐ கடந்து அதிர்ச்சி தருகிறது.

சென்னையில் பாதிப்பு குறைய ஆரம்பிக்க, மற்ற மாவட்டங்களில் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் மேலும் 271 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 11579 ஆக அதிகரித்துள்ளது.

2866 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8224 பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர். செங்கல்பட்டு போன்று வேலூரிலும் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது.

அதன்படி இன்று ஒரேநாளில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,952ஆக அதிகரித்துள்ளளது.