நிறைவு பெற்றது சென்னை புத்தக கண்காட்சி: ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை..!!

Author: Rajesh
6 March 2022, 6:58 pm

சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி என்ற சிறப்பை பெற்ற சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பிப்ரவரி 16ம் தேதி புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்கியது.

இந்த 45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 18 நாட்களாக தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற்றது. 800 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இந்த கண்காட்சிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தனர். இந்நிலையில், சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை, 15 லட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்து சென்றுள்ளதாகவும், சுமார் 15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் விற்பனை ஆகியுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!