‘இந்தியர்கள் எல்லோரும் உடனே புடாபெஸ்டுக்கு வந்துருங்க’: உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல்..!!

Author: Rajesh
6 March 2022, 4:45 pm
Quick Share

புதுடெல்லி: உக்ரைனில் பிற பகுதியிலுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் புடாபெஸ்டுக்கு வந்து சேரும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 11வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளின் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

அவர்களுக்காக சிறப்பு விமானங்களை அந்தந்த நாடுகள் இயக்கி, மீட்டு வருகின்றன. அந்த வகையில், உக்ரைனில் போர் சூழலில் இருந்து இந்தியர்கள் மற்றும் மாணவர்களை ஆபரேசன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்ஷி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,

உக்ரைனிலுள்ள பிசோசின் மற்றும் கார்கிவில் உள்ள ஒவ்வொருவரையும் மீட்க இருக்கிறோம். உக்ரைனின் சுமி நகரில் உள்ள எங்களுடைய இந்திய மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அதனால், அவர்களின் பாதுகாப்புக்காக உடனடியாக ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பல வழிகளில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடந்து வரும் சூழலில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி, உக்ரைனில் எந்த பகுதியில் வசிக்கும் மாணவர்களும் உடனடியாக ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் உள்ள ஹங்கேரியா சிட்டி சென்டருக்கு காலை 10 மணி முதல் நண்பகலுக்குள் வரும்படி தெரிவித்துள்ளது.

Views: - 1353

0

0