கொட்டித் தீர்க்கும் கனமழை… மிதக்கும் சென்னை மாநகரம் : பொதுமக்கள் கடும் அவதி

29 October 2020, 10:51 am
chennai rain 4 - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் சில மணி நேரம் பெய்த கனமழையினால் சென்னை மாநகரம் முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழையினால், சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து தற்போதும் மழை பெய்து வருகிறது. இந்த அடர்த்தியான மழையினால், சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சாலைகள் குளம் போல் காட்சியளிப்பதால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0

1 thought on “கொட்டித் தீர்க்கும் கனமழை… மிதக்கும் சென்னை மாநகரம் : பொதுமக்கள் கடும் அவதி

Comments are closed.