இனி சினிமா பாடலை போடக் கூடாது : தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு

Author: Babu Lakshmanan
29 March 2022, 1:09 pm
Quick Share

சென்னை : சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், தனியார் பள்ளி வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை- வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் வளாகத்தில் ஓட்டுநரின் அலட்சியத்தால், பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், தனியார் பள்ளி வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பள்ளி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்

மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனத்தில் உதவியாளர் நியமிக்கப்பட்ட வேண்டும்.பள்ளி வாகனங்களை ஓட்டும்போது திரைப்படப் பாடல்களை போடக் கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 618

0

0