ஸ்டாலின் பதில் சொல்லியே ஆகனும் : சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம்.. உயர்நீதிமன்றம் அதிரடி!!

19 April 2021, 4:08 pm
Chennai high court - stalin - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்ற விவகாரத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் குழு நோட்டீஸை அனுப்பியது. இதையடுத்து, நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மனு தாக்கல் செய்தனர்.

dmk gutka - updatenews360

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஜெ.அன்பழகன், கே.பி.பி. சாமி ஆகியோர் உயிரிழந்து விட்டனர். கு.க. செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீஸில் பிழை இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், புதிய நோட்டீஸ் அனுப்பலாம், என உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமை மீறல் குழு, தி.மு.க.வின் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸை அனுப்பியது. இதை எதிர்த்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸை மீண்டும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Chennai_High_Court (1)

இதனை எதிர்த்து சட்டப்பேரவை செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, உரிமைக்குழு நீடிக்கிறதா..? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதே அரசு மீண்டும் அமைந்தால், உரிமைக்குழு நீடிக்கும் என அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முக ஸ்டாலின் உள்பட 18 எம்எல்ஏக்களும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Views: - 100

0

0