100 கி.மீ. வேகம் எல்லாம் வேண்டாம்… கொஞ்சம் குறைச்சுக்கோங்க : வாகனங்களின் வேகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு!!

Author: Babu Lakshmanan
14 September 2021, 6:02 pm
Chennai High Court- Updatenews360
Quick Share

சென்னை : வாகனங்களுக்கான வேகத்தை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பல் மருத்துவர் விபத்தில் சிக்கினார். அதில், அவரது உடல் உறுப்புகள் 90 சதவீதம் செயலற்றுப் போயின. அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று மத்திய அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு நிர்ணயித்த வாகனங்களின் வேக உச்சவரம்பை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், 2014-ம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியதுடன், அதனடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிடவும் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

Views: - 220

0

0