+2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… கோவாவில் தலைமறைவான பள்ளி தாளாளர் மகன் ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!!

Author: Babu Lakshmanan
25 November 2022, 9:22 am
Quick Share

சென்னை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தனியார் பள்ளி தாளாளரின் மகனை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு, அப்பள்ளியின் தாளார் வினோத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 12ம் வகுப்பு மாணவிகளில், சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தேர்வு செய்து, அவர்களை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளி தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போராட்டக் களமாக காட்சி அளித்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. சென்னை திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று வினோத் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ஒவ்வொரு முறையும் பாலியல் ரீதியாக ஒருவரை முடக்க முடியுமானால் அது தவறு. நேர்மையாக குழந்தைகளுக்காக எத்தனையோ ஆசிரியர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் சாகிறேன். ஒரு ஆசிரியர் தன் சுயநலத்திற்காக இவ்வாறு செய்ய முடியுமானால் அது நியாயமில்லை. இது என்னுடைய மரண வாக்குமூலம்” எனக் கூறியிருந்தார்.

நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் இருமுறை விஷம் அருந்தியதாக குறிப்பிட்ட வினோத் வீடியோவில் பேசும் பொழுதும் விஷம் அருந்தியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தலைமறைவான பள்ளி தாளாளர் மகன் கோவாவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், கோவாவில் வைத்து வினோத்தை கைது செய்த போலீசார், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவருக்கு 15 நாள் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 290

0

0