சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து… நோயாளிகள் பத்திரமாக மீட்பு… 5 மருத்துவர்கள் ஐசியூவில் அனுமதி!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 4:17 pm
Quick Share

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி மருத்துவனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கிய மருத்துவர்கள் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2வது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் பிரிவில் முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இந்த தீவிபத்தில் அறையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்தும், வெடித்தும் சிதறின. பின்னர், அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்.

தீ விபத்தால் அதிகளவில் புகை எழுந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. நரம்பியல் வார்டில் நோயாளிகளை மீட்க சென்ற 5 டாக்டர்கள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத் தீவிபத்து குறித்து தகவல் அறிந்த சுதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

Views: - 660

0

0