மோடி ஒரு FRAUD… நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு வேலையில் பாஜக : திருமாவளவன் கடும் தாக்கு…!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 7:37 pm
Quick Share

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலை புறக்கணிக்கக் கூட தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விசிக ஆர்ப்பாட்டத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றியதாவது :- சனாதன சக்திகளின் அரசியலை அழிக்க நெருப்பை பற்ற வைக்கிறோம். ஜனவரியில் இ.வி.எம் இயந்திரத்தை முற்றாக நீக்கி வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்றோம். இந்த முறை 100 சதவீதம் ஒப்புகைச்சீட்டை பயன்படுத்தி முடிவுகளை அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இண்டியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த நிலைபாடு.

2019க்கு முன்பு நடந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக படுதோல்வி. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரு வெற்றி. இது சில்லுமுல்லு நடவடிக்கை. 39 இலட்சம் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் 20 இலட்சம் என்று தவறாக தகவல் தெரிவிக்க வேண்டும்? மீதி 19 இலட்சம் இயந்திரங்கள் எங்கே?
கடந்த தேர்தலில் 393 இடங்களில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வேறுபாடு உள்ளது.

220 தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக வந்துள்ளது. மீதிக் தொகுதிகளில் குறைவாக வந்துள்ளது.‌ இது மோசடியை காட்டும் வகையில் உள்ளது. வல்லுனர்கள் இந்த மோசடியை கண்டறிந்துள்ளனர். இது இயந்திர வாக்குப்பதிவல்ல… மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று ராகுல் பேசியுள்ளார்.

விசிக தேசிய கட்சியல்ல, ஆனால் தேசிய கட்சிகள் பதறாத பிரச்சனைகளிலும் நாம் போராடுகிறோம்.
ஜனநாயகம், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். பாஜக நீதி நெறிகளை பேசுவார்கள், விரதம்‌ இருப்பார்கள். ஆனால் அனைத்தையும் அரசியலுக்குவார்கள். எதிர்கட்சிகளை நக்கல் அடிக்கிறார்.

இந்த பத்து ஆண்டுகள் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடியின் பினாமி அதானி. அதனால் அவரின் பெயரில் சொத்துகள் எழுதப்படுகின்றன. மோடி ஒரு ஃப்ராடு. அமெரிக்கா, ரஷ்யா பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே இயந்திர‌ வாக்குபதிவை நம்பாமல் வாக்குச்சீட்டை பயன்படுத்துகின்றன.

ஜெர்மனி, அயர்லாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி, பின்னர் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறின. இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுப்பெற வில்லை என்பது வருத்தத்திற்குரியது. தேர்தல் நன்கொடை பத்திரம் மிகப்பெரிய மோசடி. இவ்வளவுப்பெரிய மோசடியை சட்டப்பூர்வமாக மோடி கும்பலால் மட்டுமே செய்ய முடியும்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலை புறக்கணிக்கக் கூட தயாராக இருக்கிறோம். நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமென்பதே என் முன்னால் உள்ள சவால். அரசமைப்புச் சட்டத்திற்கே பாஜக வேட்டு வைத்துள்ளது. மீண்டும் பாஜக வந்தால் அதிபர் ஆட்சி முறை, எனக் கூறியுள்ளார்.

Views: - 181

0

0