ஒருதாய் வயிற்றில் பிறந்தவருக்கே துரோகம் செய்தவர்… மக்களுக்கு நல்லதா செய்யப்போகிறார்..? ஸ்டாலினை காலி செய்த எடப்பாடியார்..!!!

By: Babu
6 January 2021, 6:28 pm
eps - campaign - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 2 நாள் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மேற்கொண்டு வருகிறார். அப்போது, மக்களிடையே அவர் பேசியதாவது :- திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதனால், மக்களுக்கு என்ன நல்லது செய்திருக்கிறார். மாறாக, கவர்ச்சிகரமான திட்டங்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்.

தற்போதைய ஆட்சியில் பூத கண்ணாடியை வைத்து பார்த்தாலும் ஒரு குறையையும் கண்டுபிடிக்க முடியாது. முதலமைச்சர் பதவிக்காக ஸ்டாலின் வெறியுடன் செயல்பட்டு வருகிறார். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயலுகிறார். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது. கிராம பொருளாதாரத்தை ஊக்குவிதமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தவருக்கே துரோகம் செய்த ஸ்டாலின், மக்களுக்கு நல்லதா செய்யப்போகிறார்..? துண்டு சீட் இல்லாமல் நேருக்கு நேர் கருத்து மோதலில் மோதிக் கொள்ளத் தயார், எனக் கூறினார்.

Views: - 35

0

0