மாட்டு வண்டி ஓட்டிய முதலமைச்சர் பழனிசாமி : கோரிக்கையை நிறைவேற்றியதால் விவசாயிகள் நெகிழ்ச்சி..!

22 October 2020, 3:52 pm
Cm bullock cart - updatenews360
Quick Share

புதுக்கோட்டை : காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக நன்றி தெரிவிக்க சூழ்ந்திருந்த விவசாயிகளின்
கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியை ஓட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் பழனிசாமி, தாயாரின் மறைவினால் அதனை தொடர முடியவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அவர், விராலிமலையில் சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்ற வெண்கல சிலையை திறந்து வைத்தார். கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டை பெருமிதப்படுத்தும் விதமாக இந்த சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் 100 ஆண்டு கால கனவு திட்டமாக, காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 1,088 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளமான கவிநாடு கண்மாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் பழனிசாமியை வரவேற்பதற்காக சுமார் 500 மாட்டு வண்டிகளுடன் வந்த விவசாயிகள், பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். மேலும், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் விருப்பத்தை ஏற்று மாட்டு வண்டியை ஓட்டினார். இதைப் பார்த்த பொதுமக்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

Views: - 34

0

0