கீழடியில் 8வது கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்… காணொளி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

Author: Babu Lakshmanan
11 February 2022, 4:25 pm
Quick Share

சென்னை : கீழடியில் 8வது கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய அரசின் சார்பில் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்துள்ளன.

அதன்பிறகு, 3 ஆண்டுகள் இடைவேளைக்கு கீழடியில் அகழாய்வு பணிகள், தமிழக அரசின் சார்பில் 4 கட்டங்களாக நடந்தது. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன. இதுவரை நடந்த அகழாய்வு பணிகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் இந்தப் பணிகள் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளையும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகளையும் அவர் இன்று தொடங்கி வைத்தார்.

Views: - 855

0

0