தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை ஒதுக்குங்க : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!

13 July 2021, 1:22 pm
stalin - modi - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசிகளே உயிர்காக்கும் காரணிகளாக இருந்து வருகிறது. இந்தியாவில், கோவேக்சின், கோவிஷில்டு, ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் பணிகளையும் துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மத்திய அரசு முறையான தடுப்பூசிகளை ஒதுக்குவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தடுப்பூசி போட்டுக் கொள்ள நினைக்கும் மக்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டிற்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால்‌, மாநிலம்‌ முழுவதும்‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்து வரும்‌ தடுப்பூசிக்கான தேவையைப்‌ பூர்த்தி செய்வது மிகவும்‌ கடினமாக உள்ளது. தடுப்பூசி ஒதுக்கீட்டில்‌ உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவும்‌, தமிழ்நாட்டிற்கு மக்கள்‌ தொகை அடிப்படையில்‌ சரியான அளவில்‌ தடுப்பூசிகள்‌ கிடைத்திடவும்‌, ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு
ஒதுக்கீடாக அளிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 150

0

0