‘இனி பணத்த நாங்க வசூல் பண்ணிக்கிறோம்’ : கோவை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் மிரட்டும் ஆடியோ வைரல்!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 12:37 pm
Quick Share

கோவில் இடத்தில் நடைபெறும் சந்தை வாடகையை வசூல் செய்வது தொடர்பாக கோவை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை நடைபெறுவது வழக்கம். சந்தைக்கு வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமாகும். இதனை கோவில் கமிட்டியின் சார்பாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்படி சந்தை வாடகைகளை வழக்கமாக வசூலிக்கும் நபரை தொடர்பு கொண்ட கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனாவின் கணவர், இனி வாடகைகளை நாங்களே வசூலித்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.

சந்தையில் போடப்படும் கடைகளின் வாடகைகளை இனிமேல் கோவில் நிர்வாகிகள் வசூல் செய்யக் கூடாது என்றும், அதற்கு அந்த நபர் நீங்க கோவில் கமிட்டியிடம் பேசிக் கொள்ளுங்கள் எனக் கூறும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே, திமுக ஆட்சியில் கோவில்கள் வஞ்சிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், கோவிலுக்கு சேர வேண்டிய சந்தை வாடகைகளையும், திமுக பிரமுகர்கள் இதுபோன்று வசூலித்துக் கொள்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ஆடியோ உண்மை நிலையை காவல் துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 165

0

0