திமுக தந்த நெருக்கடியால் நெல்லையில் அதிருப்தி வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ்? விளவங்கோடு பஞ்சாயத்துக்கும் முற்றுப்புள்ளி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 4:53 pm

திமுக தந்த நெருக்கடியால் நெல்லையில் அதிருப்தி வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ்? விளவங்கோடு பஞ்சாயத்துக்கும் முற்றுப்புள்ளி!!

திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் திருநெல்வேலி வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியது காங்கிரஸ்.

இதனையடுத்து திருநெல்வேலி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச் சோழன் முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் சிம்லா முத்துச் சோழன் என்கிற விமர்சனங்கள் எழுந்ததால் அவர் மாற்றப்பட்டு ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பாஜக கூட்டணியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக களம் காண்கிறார். நயினார் நாகேந்திரன், முதலில் தூத்துக்குடி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு பின்னர் நெல்லை பாஜக வேட்பாளராக மாற்றப்பட்டார்.

தற்போது காங்கிரஸிலும் நீண்ட இழுபறிப்புக்குப் பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!