ஊட்டியில் அதிமுக – பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி ; எஸ்பி மன்னிப்பு கேட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றார் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 4:56 pm
Quick Share

நீலகிரி ; உதகையில் பாஜக மற்றும் அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று பவுர்ணமி என்பதால், அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, பாஜக தொண்டர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் உடனிருந்தார். அதே சமயத்தில் அதிமுக வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதனால், ஒரே நேரத்தில் அதிமுக, பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

ஒரே நேரத்தில் திரண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடியடியால் காயமுற்ற பாஜக தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”ஊட்டி எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஊட்டி எஸ்.பி அண்ணாமலையிடம் பேசி வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து, பாஜகவினர் அங்கிருந்து களைந்து சென்றனர்.

Views: - 391

0

0