பாஜகவின் திட்டமிட்ட பிளானா..? தானாகவே எம்பி பதவியை இழந்த ராகுல் காந்தி… அதிர்ச்சியில் காங்கிரஸ் மேலிடம்!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 1:53 pm

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என விமர்சித்தார். அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், 30 நாட்களுக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். மேலும், எதிர்கட்சி தலைவர்களும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சூரத் நீதிமன்றத்தின் தண்டனையால் ராகுல் காந்தி நாடாளுமன்றப் பதவியிலிருந்து தானாகவே தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லில்லி தாமஸ் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கை சுட்டிக்காட்டி பேசிய அவர், ‘குற்றத்தில் ஈடுபட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி உடனடியாக அவர்களின் உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்’ என்று கடந்த 2013ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது என்றும், எதாவதொரு குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால், அந்தப் பதவிக்கான இடம் காலியாக இருக்கும்’ என்றும் சட்டம் கூறுவதாக தெரிவித்தார்.

எனவே, நீதிமன்றம் தண்டனையை மட்டும் நிறுத்திவைத்தால் போதாது என்று கூறிய கபில் சிபல், இடைநீக்கம் அல்லது தண்டனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டால் மட்டுமே ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியும் எனக் கூறினார். மேலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மூன்று மாதங்களுக்கு அனுமதித்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) ஐ நீதிமன்றம் ரத்து செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!