மாணவர்களுக்கு 60 GB டேட்டா…குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000: புதுச்சேரி காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

Author: Aarthi Sivakumar
28 March 2021, 2:09 pm
Congress_UpdateNews360
Quick Share

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி புதுவையில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

புதுவையில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றோரு புறமும் களத்தில் மோதுகின்றன. புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு அந்த ஆட்சி கவிழ்ந்ததால் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிடாதது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

புதுவைக்கு பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி ஆகியோர் வந்து சென்று விட்டனர். இரு கூட்டணி கட்சியினரும் மக்களிடம் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி புதுவையில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ், வீரப்ப மொய்லி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். நீட் தேர்வு ரத்து, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

புதுவைக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெறப்படும்

மேல்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 GB டேட்டா வழங்கப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்.

அனைவருக்கும் மருத்துவ காப்பீடு.

மீனவர்களின் ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும்.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்படும்

Views: - 77

0

0