பொய்யும், பித்தலாட்டமும் தான் பாஜக… அராஜகத்தின் உச்சத்திற்கு முடிவு வந்திடுச்சு : செல்வப்பெருந்தகை!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 12:56 pm
Quick Share

காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பாஜக பொய்யும், பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பல்வேறு குற்ற பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சாரம் செய்தால் அவமானமாக போய்விடும் என தெரிந்து பிரதமர் மோடி தன்னுடைய பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார்.

மேலும் படிக்க: திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்ல… தேனியில் அண்ணாமலை வாக்குசேகரிப்பு..!!!

மோடி மாடல் ஆட்சியில் பாஜகவினர் அராஜகம் செய்து வருகிறார்கள். அதன் காரணமாகவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். இந்த அராஜகத்தின் உச்சத்திற்கு முடிவு வந்து விட்டது. மோடியை அரசியல் களத்தில் இருந்தும் அதிகார களத்தில் இருந்தும் மக்கள் அப்புற படுத்துவார்கள்.

காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது, எனக் கூறினார்.

Views: - 301

0

0