மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…!!

12 November 2020, 1:25 pm
vijayabaskar - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, தமிழகத்தில் இந்த ஆண்டு 4,061 மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 18ம் தேதி அல்லது நவ.19ம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது எனவும், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ்.சில் 304 மாணவர்கள், பி.டி.எஸ்.சில் 91 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டமிட்டபடி நவ.16ம்தேதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Views: - 18

0

0