மீண்டும் வெடித்த சர்ச்சை.. குஷ்பு வீட்டை முற்றுகையிடும் காங்கிரஸ் : தேதியும் வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2023, 12:42 pm
Cong Kush - Updatenews360
Quick Share

மீண்டும் வெடித்த சர்ச்சை.. குஷ்பு வீட்டை முற்றுகையிடும் காங்கிரஸ் : தேதியும் வெளியிட்ட அறிவிப்பு!!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அவதூறு பேசியதாக கொந்தளிக்கும் குஷ்பு, மணிப்பூரில் இரு பெண்களுக்கு நடந்த கொடூரத்திற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என அவருடைய சமூகவலைதளங்களுக்கு சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையடுத்து குஷ்பு தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: திடீரென தனது ட்வீட்டில் திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத்தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது இதுதான். சாரி! என்னால் உங்களை போல் சேரி மொழியில் பேச முடியாது.

ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்ணைத் திறந்து பாருங்கள் என தெரிவித்திருந்தார். குஷ்பு தனது பதிவில் சேரி மொழி என பயன்படுத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெண்களை இழிவுப்படுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துகிறார் குஷ்பு. இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரின் ஆதங்கங்கள் வலுத்தன. இந்த நிலையில் சேரி மொழி என தான் கூறியதற்கு புதியதொரு விளக்கத்தை குஷ்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: நான் பயன்படுத்தி மொழி தொடர்பாக கோபமடைந்து வந்த கூட்டத்தை பார்த்தால் எனக்கு காமெடியாக இருக்கிறது. பெண்களுக்கான பிரச்சினைகளின்போது இந்த கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படிக்காதவர்களுக்கு நான் விளக்கிவிடுகிறேன். என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள்.

நான் அன்பை பகிர்ந்து கொள்கிறேன் என கிண்டலாக தெரிவித்தேன். இவ்வாறு ட்விட்டரில் விளக்கியிருந்தார். சேரி மொழி என ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக பேசிவிட்டு பின்னர் பிரெஞ்ச் மொழியில் சொன்னதாக குஷ்பு சப்பை கட்டு கட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் குஷ்பு சேரி என தான் யாரையும் இழிவாக பேசவில்லை. அன்பு என்ற அர்த்தத்தில்தான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.பி. பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறந்த நடிகை என்பதை குஷ்பு தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்; குஷ்பு மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார்.

இந்தப் பிரச்சினையைத் தொடங்கிய நடிகர் மன்சூரலிகானே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பூ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்; வேளச்சேரி, செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்;

மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து, அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி..எஸ்டி.. பிரிவின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 178

0

0