கனிமொழி டிஸ்சார்ஜ்… துரைமுருகன் அட்மிட்… அரசியல் தலைவர்களை துரத்தும் கொரோனா!!

8 April 2021, 1:10 pm
Durai murugan - kanimozhi - updatenews360
Quick Share

சென்னை : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை மீண்டும் நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,459 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததால் அரசியல் தலைவர்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வந்தனர். அந்த வகையில், திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த எம்பி கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது. அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில், திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா பாதிப்பு உறுதியாகியது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதேபோல, திருப்பொரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த செல்வப்பெருந்தகை வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

Views: - 0

0

0

Leave a Reply