மீண்டு வருகிறார் எஸ்.பி.பி..! மருத்துவமனையின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

22 August 2020, 6:41 pm
sp-balasubramaniam- updatenews360
Quick Share

சென்னை : பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணயிம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவ நிபுணர் குழு கடந்த 16 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் எக்மோ கருவிகள் பொருத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. எஸ்.பி.பி.யின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது. இதனால், வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ சிகிச்சையால் உடல்நிலை சீராக உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவர்களுடன் ஆலோசித்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், இருப்பினும், ஐ.சி.யூ.வில் உள்ள எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 31

0

0