முக்கியமான தருணம்… 50 % படுக்கைகளை ஒதுக்கிடுங்க : தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்..!!

20 April 2021, 7:57 pm
Corona_Bed_UpdateNews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீத படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 10,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீத படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Views: - 64

0

0