குறைசொல்லி வீடியோ வெளியிட்ட கொரோனா பாதித்த பெண் : உண்மை அம்பலமாகி மூக்குடைந்த பரிதாபம்..!

30 June 2020, 2:37 pm
rajini priya 1- updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் வீறு கொண்டு வரும் நிலையில், தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தின் மொத்த பாதிப்பில் சுமார் 70 சதவீதத்தை சென்னையே கொண்டுள்ளது. ஆனால், அதேவேளையில், இந்தியாவில் அதிகம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையிலும் தமிழகமே முன்னணியில் உள்ளது.

இப்படியிருக்க, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 42 வயது பெண் ரஜினி பிரியா என்பவர் ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள், முறையான சிகிச்சை வழங்க வில்லை என்றும், தன்னைப் போன்று மற்றவர்களையும் அலட்சியமாக விடுவதால், கொரோனா அதிகளவு பரவுவதற்கு காரணமாக இருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இவரது வீடியோவை பார்த்த பலரும், அலட்சியமில்லாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளை வசைபாடினர்.

இந்த நிலையில், மத்திய அரசின் ஓய்வுபெற்ற ஊழியரும், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவருமான ராகவன் என்பவர், ரஜினி பிரியாவின் வீடியோவுக்கு பதிலளித்திருந்தார்.

அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது :- அம்பத்தூர் மண்டலத்தில் வசித்து வரும் எனக்கு 61 வயது ஆகிறது. ரஜினி பிரியா பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதை நேற்று பார்த்தேன். அந்த வீடியோவில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், தனக்கு முறையான மருந்து வழங்கவில்லை என்றும், உணவு கூட இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியிருந்தார். இதனைக் கேட்டு நான் பதறிவிட்டேன்.

rajini priya - updatenews360

கடந்த மாதம்தான் நானும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தேன். எனவே, எனக்கு தெரிந்த மாநகராட்சி அதிகாரிகளிடம், ரஜினி பிரியாவின் தவிப்பு பற்றி பகிர்ந்தேன். அப்போதுதான் எனக்கு தெரிந்தது, இந்தக் குழப்பத்திற்கு முழுக்க முழுக்க காரணம் ரஜினி பிரியாவேதான் என்று.

அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டவுடன், அவர் முதலில் அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அங்கு அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்குதான் பிரச்சனையே ஆரம்பமானது. அங்கு அவர் தன்னுடைய முகவரியில் திருவள்ளூர் மாவட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை முகவரியாக கொடுத்துவிட்டு, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுவது எந்தவிதத்தில் நியாயம். திருவள்ளூர் மாவட்டம் என ரஜினி பிரியா குறிப்பிட்டிருந்ததால், அவரது பெயர் சென்னை மாநகராட்சியின் பட்டியலில் வரவில்லை.

தற்போது, நான் கேட்கிறேன், அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை செய்யத் தெரிந்த ரஜினி பிரியாவிற்கு, அதே மருத்துவமனையில் மருந்து வாங்க தெரியவில்லையா..? திருவள்ளூர் மாவட்டத்தை முகவரியாக கொடுத்துவிட்டு, சென்னை மாநகராட்சியை குறை சொல்லுவது நியாயமா..?

இவருக்கு கொரோனா இருப்பதையறிந்து, மாநகராட்சி ஊழியர்கள் அவரது மாமியார் மற்றும் கணவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ரஜினி பிரியா தற்போது அம்பத்தூரில் உள்ள ஐடிஐ மையத்தில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியின் மூலம் சிகிச்சை பெற்றிருப்பதன் அடிப்படையில் சொல்கிறேன். எனக்கு தெரிந்தவரையில் மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கை சிறப்பாகவே உள்ளது. இதன்காரணமாகத்தான் சென்னையில் 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

பிரச்சனை என்ன என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமல், இப்படி விளம்பரத்திற்காக வீடியோ வெளியிடுவது, மாநகராட்சியை மட்டுமல்ல, கொரோனாவை எதிர்த்து போராடுபவர்களின் செயல்களை அவமானப்படுத்தும் செயலாகும். குறைசொல்லி வீடியோ போட்டி, அதுல விளம்பரம் தேடுவது ஃபேஷனாக மாறிவிட்டது, எனக் கூறினார்.

Leave a Reply