ஆளுநராகிறார் சிபி ராதாகிருஷ்ணன் : ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 10:36 am
CP - Updatenews360
Quick Share

13 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத் சிங்கோஷியாரி லடாக் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூர் சமீபத்தில் தங்களது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதை தொடர்ந்து 13 மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றிய சிபி ராதாகிருஷ்ணன் தற்போது ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் கவர்னராக செயல்பட்டு வந்த இல.கணேசன் நாகலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநில கவ்ரனராக செயல்பட்டு வந்த ரமேஷ் பயஸ் மகாரஷ்டிரா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சத்தீஸ்கர் மாநில கவர்னர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநில கவர்னராக ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர் நியமனம். ஆந்திர பிரதேச கவர்னராக இருந்த ஸ்ரீ பிஸ்வா பூசன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் கவர்னராக மாற்றம்.

அருணாச்சலபிரதேச கவர்னராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், சிக்கிம் கவர்னராக ஸ்ரீ லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, இமாச்சல பிரதேச கவர்னராக ஸ்ரீ ஷிவ் பிரதாப் சுக்லா, அசாம் கவர்னராக ஸ்ரீ குலாப் சந்த கட்டாரியா, பீகார் கவர்னர் ஸ்ரீ பாகு சவுகான் மேகாலயா கவர்னராகவும், இமாச்சல பிரதேச கவர்னர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சல பிரதேச கவர்னர் பிரிக் ஸ்ரீ பி.டி மிஸ்ரா லடாக்கின் லெப்டினட் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 433

0

0