பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. ராமநாதபுரத்தை குறிவைத்த பாஜக..? வாய்ப்பே இல்ல.. அடித்துச் சொல்லும் பாலகிருஷ்ணன்!!

Author: Babu Lakshmanan
14 July 2023, 8:49 am

வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பழனி மலைக்கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாத்திடும் வகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :- அரசு ஊழியர்களுக்கு மாதாந்திரமாக மதிப்பூதிய திட்டம் ஜூலை முதல் அமல்படுத்தப்படும் முதலமைச்சர் தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடு ஆளுங்கட்சி போல் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் செயல்பாடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சனையை உருவாக்குகிறது.

சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் மட்டுமே எல்லாம் என்பது போலவும், இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்குள் நுழைய கூடாது என்று சொல்வது தவறானது. குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக தீட்சிதர்களும், அவர்களுக்கு ஆளுநர் வக்காலத்து வாங்குவதும் ஏற்புடையது அல்ல. தற்பொழுது பழனியில் மலைக்கோவிலுக்கு இந்து மக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று புதிய பிரச்சினையை பாஜகவினரும், இந்து அமைப்பினரும் உருவாக்கி இருப்பது தவறானது.

கோவில் உள்ள சிற்பங்கள் மற்றும் கலை நயம் மிக்க கட்டிடங்களை ரசிக்கவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிமை உண்டு. காலம்காலமாக பழனி மலைக்கோவிலுக்கு அனைத்து தரப்பு மக்களும் செல்லவேண்டும். பாரதிய ஜனதா கட்சியும், இந்து அமைப்புகளோ ஏதேனும் பிரச்சினை செய்தால் மாநிலம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது அநாகரிகமானது அநீதியானது. ஆர்எஸ்எஸ், பாஜக மட்டுமே இந்து மக்களின் பிரதிநிதி போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஒட்டன்சத்திரம் பகுதியில் பழனி கோவிலுக்கு சொந்தமான கோசாலை அமைந்துள்ள இடத்தில், சிப்காட் தொழிற்சாலை அமைக்க பாஜக எதிர்ப்பு தெரிவித்து இருப்பது தவறான செயல். தொழிற்சாலை அமைக்கப்பட்டு மக்கள் முன்னேறுவதை பாரதிய ஜனதா கட்சி தடுத்து, 22ம் நூற்றாண்டில் இருந்து மக்களை பின்னோக்கி இழுக்கிறது.

பழைய காலம் போலவே ஆடு மற்றும் மாடுகளை மட்டுமே மக்கள் மேய்க்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் விற்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் பற்றி எச். ராஜா விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. வருகிற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக தகவல் வருகிறது. வட இந்தியாவில் மோடிக்கு ஏற்படும் தோல்வி பயத்தாலேயே, தமிழகத்தில் போட்டியிடப் போகிறார். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்திலும் மோடி படுதோல்வி அடைவார், என்று தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் மதுக்கூர் ராமலிங்கம், நகர மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!