சென்னையை மிரட்டப்போகும் மிக்ஜான் புயல்… டிசம்பர் 4ம் தேதி நிகழப்போகும் சம்பவம் ; வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 10:33 am
Quick Share

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், 3ம் தேதி புயலாகவும் வலுப்பெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயலாக வலுப்பெற்று, 4ம் தேதி அதிகாலை வடதமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், குறிப்பாக சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் வரும் 4-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 271

0

0