நாளை முதல் 30ம் தேதி வரை பட்டாசுகளை வெடிக்க தடை : மாநில அரசு அதிரடி அறிவிப்பு

6 November 2020, 1:46 pm
no-crackers-updatenews360
Quick Share

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நாளை முதல் 30ம் தேதி வரை பட்டாசுகளை வெடிக்க தடை விதித்து டெல்லி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமாகி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்துக்களின் பண்டிகையான தீபாவளி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

Arvind_Kejriwal_UpdateNews360

இதனிடையே, காற்று மாசுபாட்டினால் கொரோனா மேலும் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, டெல்லியில் 3வது அலை தொடங்கி விட்டதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். எனவே, பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நாளை முதல் நவம்பர் 30ம் தேதி வரை பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ” டெல்லியில் கொரோனா 3வது அலை வீசி வருகிறது. தற்போது வரை 7,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கொரோனா படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 18

0

0