டெல்லி தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: விசாரணை நடத்திய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!
Author: Sudha3 August 2024, 12:46 pm
டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள தனியார் பள்ளியான சம்மர் ஃபீல்ட்ஸ் பள்ளிக்கு நேற்று வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மின்னஞ்சல் கிடைத்த 10 நிமிடங்களில் பள்ளியில் உள்ள மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என சம்மர் ஃபீல்ட்ஸ் பள்ளியின் முதல்வர் ஷாலினி அகர்வால் நேற்று தெரிவித்தார்.பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் புரளி என உறுதியானது.
முன்னதாக மே 2 ஆம் தேதி, டெல்லியில் மொத்தம் 131 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தது. டெல்லி-என்.சி.ஆர் பள்ளிகளை அச்சுறுத்தும் வகையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் ‘ஸ்வராயிம்’ என்ற வார்த்தை இருந்ததாகவும், இது இஸ்லாமிய பிரச்சாரத்தை பரப்ப இஸ்லாமிய அரசு கடந்த 2014-ம் ஆண்டு முதல் பயன்படுத்திய அரபு வார்த்தையாகும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது.பின்னர் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது, அந்த மின்னஞ்சல் ஒரு ‘புரளி’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 14 வயது சிறுவன் தினமும் பள்ளிக்குச் செல்வது பிடிக்காமல் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
தீவிரமாக விசாரணை நடத்தி வரும் டில்லி போலீசார், ‘சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என உறுதியளித்தனர்.
0
0