பாஜக நடத்துவது’வேல் யாத்திரை அல்ல; அரசியல் யாத்திரை’: உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்…!!

10 November 2020, 3:06 pm
Quick Share

சென்னை: வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் நவம்பர் 6ம்தேதி தொடங்கி டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்தது.

இதனால் பாஜக தரப்பு நீதிமன்றத்திற்கு சென்றது. கொரோனா காலம் என்பதால் அங்கும் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக டி.ஜி.பி தரப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டி.ஜி.பி தரப்பில் வாதிடுகையில், ‘பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முறையாக முகக் கவசம் அணியவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவினர் பொறுப்பை உணராமல் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். வேல் யாத்திரை, கோயில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என்றும், பாஜகவினர் தடையை மீறி ஊர்வலம் செல்ல உள்ளனர் என்றும் டிஜிபி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 35

0

0