பேரவையில் என் பேச்சை நேரலையில் ஒளிபரப்பவில்லை.. நடுநிலையாக செயல்படவில்லை : இபிஎஸ் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 2:30 pm
EPS Speech - Updatenews360
Quick Share

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

வயிறு வலியால் அந்த சிறுமி துடித்துள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது.

5 வயது சிறுமி பள்ளி தாளாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. பிஞ்சு குழந்தையை அந்த பள்ளியின் உரிமையாளரே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர் புகார் அளித்து 13 மணிநேரம் கழித்துதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து நான் சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும் போதே நேரலையை நிறுத்தி விட்டனர். வேண்டும் என்றே திட்டமிட்டு நேரலையை நிறுத்துகின்றனர். திட்டமிட்டு செய்கின்றனர். பெண் குழந்தையின் நிலைகுறித்து நான் பேசியதை புறக்கணித்து விட்டனர்.

எதிர்கட்சியினர் கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல், அமைச்சர்கள், முதல்வர் பதில் சொல்வதை மட்டுமே ஒளிபரப்புகின்றனர். இது என்ன ஜனநாயகம்? பிரதான எதிர்கட்சியினர் பேசுவதையும் ஒளிபரப்ப வேண்டுமே? அதிமுக ஆட்சியில் இருந்த போது எல்லோர் பேசுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Views: - 248

0

0