அதிவேகத்தால் வந்த ஆபத்து: 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியானகொடூரம்:திண்டுக்கல்லில் சோகம்…!!
Author: Sudha3 August 2024, 2:31 pm
திண்டுக்கல்லில் பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் ரெண்டலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் எலெக்ட்ரிசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அருணா அவர்களது மகன் ரக்சன் ஜோ (வயது 7), மகள் ரக்ஷிதா (வயது 4) ஆகிய நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் இரெண்டலபாறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது நல்லாம்பட்டி பிரிவில் அந்த சாலையில் திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இறந்த நான்கு பேரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0
0