காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்… விடியவிடிய சீரழித்த கும்பல் ; திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
6 ஏப்ரல் 2024, 10:53 காலை
Quick Share

திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப்போட்டு விட்டு அக்கா மற்றும் தங்கையை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த 3 பேரை சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19,17,13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 19 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவரும் தங்களது காதலர்களுடன் கடந்த மார்ச் 30, இடையகோட்டையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றனர்.

மேலும் படிக்க: புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்று ஒரே நாளில் ரூ.840 அதிகரிப்பு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

மீண்டும் வீடு திரும்பிய போது அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையோரம் நின்று கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் (21), முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (22) ஆகிய 3 பேரும் அந்த சிறுமிகளிடம் எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள் என கேட்டுள்ளனர். ஓட்டலில் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து விட்டு வெளியே வந்த காதலர்கள் அவர்களிடம் தங்களுடன் வந்ததாக கூறியுள்ளனர்.

பின்னர், அவர்கள் 3 பேரும் சுள்ளான் என்ற பிரசன்ன குமார் (25), என்பவருக்கு போன் செய்து, “2 சிறுமிகள் சிக்கியுள்ளனர். அவர்களை கத்தி முனையில் மிரட்டி அழைத்து வருகிறேன்,” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காதலர்கள் 2 பேரையும் ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு, சிறுமிகள் 2 பேரையும் மற்றொரு பைக்கில் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர்.

மேலும் படிக்க: அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை… கோவையில் விடிய விடிய ரெய்டு..!!

அங்கு வந்தவுடன் காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டனர். அந்த இடத்துக்கு பிரசன்ன குமாரும் வந்து விடவே, 4 வாலிபர்களும் சேர்ந்து 2 சிறுமிகளை இரவு முழுவதும் கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய பிரசன்ன குமாரை தேடி வருகின்றனர்.

பிரசன்ன குமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் தாலுகா, மேற்கு தாடிக்கொம்பு, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை. கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுத்தி, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

  • Tirupati CM ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம்.. தலையில் சுமந்து காணிக்கை செலுத்திய முதலமைச்சர்..!!
  • Views: - 290

    0

    0