‘கூவத்தூர் விடுதியில் இதுதான் நடந்துச்சு’… பிரபல நடிகை குறித்து ஏவி ராஜு சர்ச்சை பேச்சு ; இயக்குநர் சேரன் உச்சகட்ட டென்சன்..!!!

Author: Babu Lakshmanan
20 February 2024, 2:55 pm
Quick Share

நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பேசியதா அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு மீது நடவடிக்கை எடுக்ககோரி இயக்குநர் சேரன் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏவி ராஜு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான புகார்களை முன்வைத்து வருகிறார். அவர் பேசியுள்ள விஷயங்கள் இணையதளத்தில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

அதிலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் பெயரை கூறி கூவத்தூர் ரிசாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி அவர் பேசிய விஷயம் மிகப் பெரிய பிரளயத்தையே அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ஏற்படுத்தி இருக்கிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் எம்எல்ஏ வெங்கடாசலம் என்ன கூத்து அடித்தார் என்ன செய்தார். அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியும். நடிகை திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அடம்பிடித்தார் என்றும், கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஏவி ராஜு தெரிவித்துள்ளார்.

வெங்கடாசலம் குடிக்க மாட்டார். ஆனால், பெண்கள் விஷயத்தில் அவர் வீக் என்பதால் அதற்காக நடிகைகளை ஏற்பாடு செய்து பல நடிகைகள் அங்கே வந்தார்கள். சின்ன வயதான திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாசலம் அப்போது அடம் பிடித்தார். இதற்கு ஆதாரத்தை நான் காட்ட முடியாது. இதெல்லாம் நடந்தது இதற்கெல்லாம் ஏற்பாடு செய்ததேஅவர் தான் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜுவின் இந்தப் பேச்சுக்கு திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திரைத்துறையினர் பற்றி அவதூறு பேசிய அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், “வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்,” எனக் கூறி, நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், கார்த்தியை குறிப்பிட்டுள்ளார்.

Views: - 1548

0

0