திருவண்ணாமலை மாவட்டத்தை ரெண்டா பிரியுங்க : அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2023, 4:54 pm

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறித்தி கட்சி தொண்டர்களுடன் போராட்டம் நடத்தி வரும் பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பெரிய பரப்பளவும் 27 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட திருவண்ணமலை மாவட்டத்தை எதற்காக இன்றளவும் பிரிக்காமல் இருக்கறீர்கள் என்று தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றை ஒரு மாவட்டத்திற்கு 4 தொகுதிகள் வீதம் இரண்டு மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.

மேலும் கோவை, மதுரை தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களிலும் மக்கள்தொகை அதிகமுள்ளதாகவும், அந்த மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!