தமிழரின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நான் பாசிஸ்ட் தான்.. ஆளுநர் பேசியது திமிர் பேச்சு : கொந்தளித்த சீமான்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2023, 2:58 pm
Semman - Updatenews360
Quick Share

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். பாகுபாடற்ற கல்வி, மருத்துவம், குடிநீர் வழங்குவதுதான் சாதனை.

சுங்க கட்டணத்தை நிறுத்த வேண்டும், வரி கட்டி வாழ முடியவில்லை. விடுதலை மாதிரி ஒரு படத்தை வெற்றிமாறனால் தான் எடுக்க முடியும். கலாஷேத்ரா விவகாரத்தில் உண்மை இல்லாமல் போராட்டம் நடத்த வாய்ப்பில்லை.

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. குற்றவாளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழரின் உரிமைக்காக குரல் கொடுப்பவன் பாசிஸ்ட் என்றால், நான் பாசிஸ்ட் தான்.

தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தொழில்களில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலையை உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் போல உபர், ஓலா, ரேபிட்டோ போன்ற சேவைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். வெளிநாட்டு நிதி மூலம் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்ததாக ஆளுநர் பேசியது திமிர் பேச்சு”என்றார்.

Views: - 237

0

0