பிரேமலதாவின் அறிவிப்பால் அதிமுக குஷி : உதயநிதிக்கும் கடும் எச்சரிக்கை…!!!

Author: Babu
11 January 2021, 8:30 pm
வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தேர்தலின் போது முடிவு செய்யப்படும் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகே தண்ணீா் பந்தலை, பிரேமலதா திறந்துவைத்தார்; இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு இளநீா், தா்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. எனவே, இது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதேநேரம், நாம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தல், தமிழகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை நிகழும். தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தைத் தரக் கூடிய அரசியலாக 2021 சட்டப்பேரவை தோ்தல் அமையும். இதுவரை, தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது. 2021 தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது, தோ்தல் நேரத்தில் கட்சித்தலைவா் விஜயகாந்த் முடிவு செய்து அறிவிப்பாா். அவரது முடிவு தமிழக மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
Quick Share

அதிமுக கூட்டணியில்தான் தற்போது வரை தேமுதிக நீடிப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அருள்புரத்தில் மாற்று கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தேமுதிகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, கட்சியில் இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்ட பிறகு, கூட்டணி குறித்த அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார். அதிமுகவை பொறுத்த வரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில்தான் தற்போது வரை தேமுதிக நீடிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக முரசு சின்னத்தில் போட்டியிடும். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பெண்களை தவறாக பேசியிருந்தால் இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 50

0

0