‘இது எங்க ஆட்சி…நாங்க சொல்ரதைதான் கேட்கனும்’ : பாஜக பிரமுகரின் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய திமுகவினர்..!!

Author: Babu Lakshmanan
28 June 2021, 6:51 pm
thiruppur fire1 - updatenews360
Quick Share

தாராபுரம் : மிரட்டல் விடுத்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாஜக அரசு தொடர்பு துறை மாவட்ட செயலாளரின் வீட்டை திமுகவினர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சின்ன புத்தூர் கிராமம் குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (50). பாஜக அரசு தொடர்பு துறை மாவட்ட செயலாளரான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்களுடைய பகுதியில் குடிநீர் வருவதில்லை எனவும், குடிநீர் வழங்க வலியுறுத்தியும் சின்ன புதூர் ஊராட்சியில் புகார் தெரிவித்துள்ளார்.

அப்போது தண்ணீர் திறந்துவிடும் கொப்பன் என்பவர், உங்கள் பகுதிக்கு இனி தண்ணீர் வராது என கடுமையான வார்த்தைகளால் செல்வராஜை திட்டியுள்ளார். இதற்கு மேலிடத்தில் புகார் தெரிவிப்பேன் என கூறிவிட்டு வீடு அவர் திரும்பியுள்ளார் செல்வராஜ். செல்வராஜ் மற்றும் அவரது மனைவி பரிமளா (42), மகன் சபரீஸ்வரன் (12) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

thiruppur fire - updatenews360

அந்த சமயம், அவர்களின் வீட்டிற்கு அதே பகுதியில் உள்ள திமுகவை சேர்ந்த குப்பன், பாலன், கிருஷ்ணன், கார்த்தி, சூர்யா, ஆகிய 5 நபர்கள் 20 அடியாட்களுடன் பயங்கர ஆயுதத்துடன் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு செல்வராஜ் புகார் கொடுப்பதற்கு சென்றதை அறிந்த திமுகவினர், அவரது வீட்டின் முன் பகுதியை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். அப்போது வீட்டில் முன் பகுதியில் யாரும் இல்லாததால், அவரது மனைவியின் மகன் உயிர் தப்பினர்.

மேலும் திமுக ஆட்சியில் திமுகவினர் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என கூறியும், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் எங்களுடைய அமைச்சர் அவரை வைத்து உன் குடும்பத்தை அழித்து விடுவோம் என்று தீ’ வைத்த திமுகவினர் கூறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனஅரசு மற்றும் ஆய்வாளர் மகேந்திரன் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரில் இடத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 478

0

0