வாரியாரால் வீழ்ந்த தி.மு.க. : அன்று கருணாநிதி…. இன்று ஸ்டாலினா..?

25 August 2020, 8:14 pm
vaariyar 1- updatenews360
Quick Share

1944ல் மிக தைரியமாக பெரிய புராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என திக ஆட்டம் போட்ட காலம்.
அப்போது “நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது” என பொதுவாக சொன்னார் வாரியார். அதை சவாலாக ஏற்று கொண்ட திக தரப்பு பொங்கி எழுந்தது.

அண்ணா துரை “கீலாசேபம்” என்றொரு கட்டுரை எழுதி, பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு என பொங்கி கொண்டிருந்தார். ஈ.வெ.ரா விடுதலையில் தலையங்கம் எழுதினார். ‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.

வாரியாருக்கு எதிரான நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருந்தார். அண்ணாவுக்கும், கிருபானந்தவாரிக்கும் எழுத்துபோர் நடந்தது. அது தீவிரமாகவும் நடந்தது. வாரியாரின் தாக்குதல் முன் பேரறிஞர் பதுங்கினார்.

அதே நேரம் மணியம்மையுடன் ராமசாமி இரண்டாம் திருமணம், ராமசாமியுடன் மனகசப்பு என காட்சிகள் வந்ததால் தனது நிலையை மாற்றினார் அண்ணா. வாரியார் சுவாமிகள் தன் இயல்பில், அவர்போக்கில் ஆன்மீக மேகமாய் பொழிந்து கொண்டிருந்தார். அவ்வப்போது திமுக வாரியார் மோதல் நடந்து கொண்டே இருந்தது.

வாரியாரின் மக்கள் அபிமானத்தை கண்ட கருணாநிதி நேரடியாக தாக்காமல் தன் அடிபொடிகள் மூலம் எழுதி தாக்கி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக மு. கருணாநிதியே ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருந்தார்.

1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்தார். அப்பொழுது வாரியார் சுவாமிகள் நெய்வேலி பக்கம் ஆன்மீக கூட்டங்களில் பேசினார். “கடவுளை நம்பாதவனுக்கு நல்மரணம் வாய்க்காது, மருத்துவம் அவனுக்கு பலன் கொடுக்காது” என்றுதான் பொதுவாக சொன்னார். ஆனால் அவர் அண்ணாதுரையினை சொல்லிவிட்டார் என திமுக ரவுடிகள் அவரை சூழ நின்று தாக்கினர்.

மக்கள் கூட்டம் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டது. காயமின்றி வாரியார் தப்பினாலும், அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன‌. வாரியார் தாக்கப்படும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியதை தமிழகம் ரசிக்கவில்லை.

விஷயம் சட்டசபை வரை எதிரொலித்தது. வாரியாருக்கு இருந்த மிகப்பெரும் நற்பெயரை தமிழகம் கண்டது. மக்கள் அபிமான கிருபானந்தர் திமுகவினரால் தாக்கபட்டது மிகபெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திற்று.

ராஜாஜி மனம் வருந்தி எழுதினார். தீட்சிதர்களும் ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர். முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரி அனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள். ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார்.

நிலைமை எல்லை மீறி சென்றதை அவதானித்த கருணாநிதி, அந்நேரம் தன்னுடன் மோத தொடங்கியிருந்த எம்.ஜி. ராமசந்திரனை சரியாக பழிவாங்கினார். வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார்.
ஆனால் அதுதான் அவரின் வாழ்வில் மிகபெரும் தவறு,.

தெய்வத்தின் தண்டனை சரியாக இருந்தது. வாரியாரை நேரில் சந்தித்து உண்மையினை விளக்கினார் எம்ஜிஆர்.
வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக‌ தலைவர் அவர்தான். அப்பொழுதுதான் அவரை வாழ்த்தி அனுப்பினார் வாரியார்.

அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதலமைச்சராக அமர்ந்தார் ராமசந்திரன். அதன் பின் கருணாநிதியால் எழமுடியவில்லை. 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது.

வாரியாரால் ராமசந்திரன் ஆசீர்வதிக்கபடும் காட்சியே ராமசந்திரனுக்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது.
“பொன்மன செம்மல்” என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே ராமசந்திரனுக்கு அடையாளமாகி, மங்கா புகழாகி அவரை அரசர் கோலத்துக்கு ஆக்கியது.

சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு ராமசந்திரன் மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது. அத்தோடு போலி நாத்திக அடையாளம் இங்கு ஒழிய ஆரம்பித்தது.

அதன் பின்பே ஜெயலலிதா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார். இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுதினமும் தான் ஒரு இந்து என்பதை பகிரங்கமாக சொல்கின்றார். வாரியாருடன் மோதியதில்தான் திமுகவின் அழிவு தொடங்கிற்று. முருகபெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த அரக்க கூட்டத்தை சரித்து போட்டார்.

வாரியார் மேலான தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை. முருகபெருமானின் அடி அப்படி இருந்தது. வரலாற்றின் மிக பெரிய சான்று இது.

ஒரு அரசியல் வித்தகர் சாதாரண முருகன் கோவில் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட பெரும் வரலாறு அது. அந்த தோல்விதான் இப்போதும் திமுகவை கந்த சஷ்டி கவசமாக மாறி துரத்தி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.. வரும் சட்டசபை தேர்தலை…!

Views: - 181

0

0