பாஜக ஸ்டெயிலை கையில் எடுத்த திமுக… திடீர் காரணம் என்ன..? கலக்கத்தில் கட்சி நிர்வாகிகள்… !!

Author: Babu Lakshmanan
15 April 2022, 4:56 pm
Quick Share

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து வரும் திமுக, திடீரென்று பாஜகவைப் போல சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நிறைய கட்சிகள் இருந்தாலும், ஒவ்வொரு கட்சியும் ஏதேனும் ஒரு கொள்கையிலோ அல்லது விதிகளிலோ மாறுபட்டு இருக்கும். அதில், குறிப்பிட்ட கட்சிகளின் விதிகளோ, கொள்கைகளோ மக்களின் மனதில் வலுவாக நிற்கும். அதுதான் பாஜகவின் ஒரு நபருக்கு ஒரு பதவி என்னும் விதியாகும்.

BJP_FLAG_UpdateNews360

ஒருவர் கட்சி பொறுப்பில் இருந்தால், அவரால் மக்கள் பிரதிநிதிகளான எம்பி., எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளை வகிக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகளாக இருந்தால், அவர் கட்சியின் பொறுப்பில் இருக்கு முடியாது என்பதுதான் பாஜகவில் இருக்கும் முக்கியமான விதிமுறையாகும்.

இந்த நிலையில், கட்சி மற்றும் ஆட்சி என இரு பதவிகள் உள்ளவர்களை நீக்கி புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், நகர்ப்புற தேர்தல் என ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற திமுக மகிழ்ச்சியில் உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் 50% வாய்ப்பு பெண்களுக்கு மேலிடம் வழங்கியதால், தங்களின் மனைவி மற்றும் உடன்பிறப்புகளுக்கு இடத்தை வாங்கி போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளனர் திமுக தலைகள். இதனால், கட்சி மற்றும் ஆட்சி ஒரு குடும்பத்தின் கையிலேயே அகப்பட்டுள்ளது. பதவி கிடைக்காதவர்கள் திமுக மேலிடம் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இரு பதவிகளை வகிப்பவர்களுக்கு மாற்றாக புதியவர்களுக்கு வாயப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கான யோசனையை திமுக எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதற்கட்டமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் இருபதவிகளை கொண்டிருப்பவர்களை ராஜினாமா செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி ஆணையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆத்தூரில் அய்யம்பாளையம் பேரூர் செயலாளராக செயல்பட்டு வரும் ஐயப்பனை பதவியை ராஜினாமா செய்ய வைத்து தங்கராஜ் என்பவருக்கு பேரூர் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கன்னிவாடி பேரூர் செயலாளர் சண்முகத்தை ராஜினாமா செய்ய வைத்து விட்டு இவருக்கு பதிலாக இளங்கோவன் என்பவருக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்லில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, இனி சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை காரணமாக திமுக நிர்வாகிகள் கலக்கம் அடைத்துள்ள வேளையில், பதவி இல்லாதவர்களுக்கு பதவி கிடைக்கலாம் என்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 895

0

0