அண்ணாமலையை பார்த்து அச்சத்தில் உளரும் திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி… முடிந்தால் கைவைத்து பாருங்கள் ; பாஜக எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
5 September 2022, 2:03 pm
Quick Share

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுடனான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்தடுத்து ஆதாரங்களோடு வெளியிட்டு வருகிறார். இதனை கண்டிக்கும் வகையில் திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே, திருவாரூரில் உள்ள ஒரு தெருவிற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட திமுக முடிவு எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த விவகாரத்தை திமுக அப்படியே விட்டு விட்டது.

RS Bharathi - Updatenews360

இந்த நிலையில், திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த திராவிட மாடல் விளக்க மாபெரும் மாநாட்டில் திமுக எம்பி ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பேசினார். மேலும் திருவாரூரில் தெற்கு வீதிக்கு கலைஞர் பெயர் சூட்டக்கூடாது என அண்ணாமலை பேசியதாகவும், இந்த இடத்தில் அப்படி பேசிய அண்ணாமலை உதை வாங்காமல் போயிருக்கிறார் என்றால் அதனை நினைந்து வெட்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

திமுக எம்பி ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,
பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி டுவிட் வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திருவாருர் வீதியிலே வந்து கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என்று சொல்லி விட்டு உதை வாங்காது போயிருக்கிறான் என்று சொன்னால் அதை கண்டு வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். இந்த மாநாடு அந்த உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பதாக கூறியுள்ளார்.

அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி, அச்சத்தில் உளறிகொட்டும் ஆர்எஸ் பாரதி அவர்களே, அண்ணாமலை மீது கை வைத்து பாருங்கள்.இன்னும் வேதனைப்படுவீர்கள். இந்த மிரட்டல்களையெல்லாம் வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள். வன்முறையை தூண்டுவதை விட்டு விடுங்கள், இல்லையேல் மேலும் வெட்கப்படுவீர்கள்,” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 426

0

0