திமுக பாணியில் தேமுதிக… விஜயகாந்த் பதவியில் அவரது மகன்? கட்சி தலைமையின் திடீர் முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2023, 2:00 pm
Vijayakanth - Updatenews360
Quick Share

திமுக பாணியில் தேமுதிக… விஜயகாந்த் பதவியில் அவரது மகன்? கட்சி தலைமையின் திடீர் முடிவு!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தேமுதிக அதை மறுத்துள்ளது.

ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியானது. இது அக்கட்சியின் நிர்வாகிளை சற்று நிம்மதிக்குள்ளாக்கியுள்ளது.

விஜயகாந்தின் உடல் நிலையை மிகவும் சீரியஸாக கவனித்து வருகிறதாம் அவரது குடும்பம். விஜயகாந்த்தின் உடல்நிலையை கவலையுடன் பேசுகிறார்கள் அக்கட்சி தொண்டர்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியில் சில மாற்றங்களை செய்ய பிரேமலதா முடிவு செய்திருக்கிறாராம்.. அந்த முடிவுகளுக்கு அவரை சுற்றியுள்ள அவரது குடும்பத்தின் அழுத்தமே காரணம் என்கிறார்கள்.

அதாவது, கட்சியின் தலைவராக உள்ள விஜயகாந்தின் உடல் நிலை மோசமாக இருப்பதையும், அவர் ஆக்டிவ்வாக கட்சி பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதும் வெளிப்படையான உண்மையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அவரது பெயரில் அறிக்கை வருவதும், அவர் உத்தரவிட்டதாக வரும் செய்திகளிலும், பெரிய அளவுக்கு நம்பிக்கை யாருக்குமே வருவதில்லை. இதுவும் கட்சிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதனால், அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைவர் பதவியில் நீங்கள் அமர வேண்டும்.. கட்சியின் இளைஞரணி பொறுப்பில் மகனை உட்கார வைக்க வேண்டும் என்பது உள்பட சில முக்கிய மாற்றங்களை செய்தாக வேண்டும் என்று பிரேமலதாவிடம் அவரது குடும்பத்தினர் வலியுறுத்துவது அதிகரித்து வருகிறதாம்.

இந்த வலியுறுத்தல்கள் நீண்ட காலமாக இருந்தாலும், இதுநாள் வரை இது குறித்து கவனம் செலுத்தாத பிரேமலதா, தற்போது இதனை பரிசீலிக்க தொடங்கியுள்ளாராம்.

குறிப்பாக, திமுக பாணியிலேயே “செயல் தலைவர்” பதவி தேமுதிகவிலும் உருவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியவில்லை.. அப்போது, ஸ்டாலின்தான், செயல் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்..

செயல் தலைவர் பதவியில் பிரேமலதாவும், மாநில இளைஞரணி செயலர் பதவியில் விஜய பிரபாகரனும் அலங்கரிக்க போவதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் கசிந்தது.. வரும் டிசம்பர் மாத இறுதியில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை நடத்த முடிவாகி உள்ளதால், அதற்கு முன்பாகவே, கட்சி தலைமை அலுவலகத்தில் யாகம் நடத்திவிட்டு, இந்த புதிய பொறுப்புகளை இருவரும் ஏற்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

  • Duraimurugan 200 திமுக ஜெயிக்கணும்… 34 தொகுதி எதிர்க்கட்சிகளுக்கு விட்டறணும் : இதுதான் நடக்கணும்.. அமைச்சர் துரைமுருகன்!
  • Views: - 430

    0

    0