சென்னை மாதிரி ரொம்ப அசால்ட்டா இருக்காதீங்க… திமுகவுக்கு அண்ணாமலை கொடுத்த அலர்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 6:57 pm

சென்னை மாதிரி ரொம்ப அசால்ட்டா இருக்காதீங்க… திமுகவுக்கு அண்ணாமலை கொடுத்த அலர்ட்!!

தென்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், சென்னை மழை வெள்ளத்தின்போது பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கியது போல, செயலற்று இருக்காமல், உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கி, தென்மாவட்டங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களையும், பேரிடர் மீட்புக் குழுக்களையும் உடனடியாக அனுப்பி, மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில், சுமார் 200 மி.மீ. மழை இது வரை பொழிந்துள்ளது என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கும் கடுமையான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

தென்மாவட்ட பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன், கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட பாஜக சகோதரர்கள், மழை நின்ற பிறகு, பொதுமக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!