எடப்பாடியாரின் ஆட்சி பொற்கால ஆட்சி… மக்கள் ஏங்குகிறார்கள் … பாஜகஅண்ணாமலை பேச்சு!!

Author: Babu Lakshmanan
19 April 2022, 11:51 am

சென்னை : எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜிஆர் வெங்கடேசனின் தந்தை, லயன்ஸ் அம்பலம் ராஜபாண்டியன் நாடாரின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நாட்டினுடைய தலையெழுத்தை வரும் நாட்களில் மாற்ற வேண்டும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி பொற்காலம். அவருடன் இருப்பது தமக்கும் பாஜகவிற்கும் பெருமை. ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிகள் எதிர்பார்ப்பார்களோ, அதுபோன்ற முதல்வராக இருந்து செயலாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆட்சிக்காக மக்கள் ஏங்குகின்றனர்,” எனக் கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?