திருமாவளவன் பாடம் சொல்லித் தர வேண்டிய அவசியமில்ல… மோசமான ஆட்சிக்கு உதாரணம் திமுக ஆட்சி ; இபிஎஸ் கடும் விமர்சனம்

Author: Babu Lakshmanan
8 March 2024, 1:50 pm
Quick Share

திருமாவளவன் எங்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை என்றும், பொன்விழா கண்ட கட்சி அதிமுக என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அதிமுக கட்சி அலுவலகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு வுக்கு சொந்தமான கூரியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை குறித்த செய்தி சேகரித்த ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது.

மின் கட்டணம், சொத்துவரி உயர்வு போன்றவற்றை அமல்படுத்தி விட்டு நீங்கள் நலமா.. என்று கேட்பது எப்படி சரியாக இருக்கும். அரசு நடவடிக்கை எடுக்காததால் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது..
இதற்கு முன்பாக இருந்த dgp அழகா பேசுவார். அவர் சைக்கிளில் போவதை எல்லாம் அழகாக செய்தியில் போடுவீர்கள்.

அவர் 1.0.. 2.0.. என o போட்டு கொண்டே ரிட்டேர் ஆகிவிட்டார். கஞ்சா கட்டுப்படுத்தப்படவில்லை. யார் என்றே விசாரிக்காமல் டிஜிபி, ஜாபர் சாதிக்கை சந்திக்கலாமா..? ஒருமுறை சந்தித்த புகைப்படம் மட்டும் வந்துள்ளது, இன்னும் எத்தனை முறை சந்தித்தார்களோ..?

போதைப்பொருள் தடுப்பில் சிறப்பாக செயல்படுவதாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது சரியா..?
வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்காலாம்..? போதைப்பொருள் தடுப்பை ஒப்பிட்டுப் பார்க்கலாமா..? அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த அரசு மோசமான அரசு என்று அர்த்தம்.

அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறோம். பாமக உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் வெளிப்படையாக கூறுவோம். பாஜக வாக்கு வங்கி அதிமுகவை விட அதிகரித்துள்ளதாக ஊடகங்கள்தான் போடுகிறீர்கள். உணமையை தெரிந்துகொள்ள மக்களிடம் சென்று கேளுங்கள்.

பழைய ஓய்வூதியம் உட்பட அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு. மற்ற கட்சி குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது.
திருமாவளவனுக்கு எங்களுக்கும் என்ன சம்பந்தம்..? எங்கள் கட்சி குறித்து அவர் ஏன் பேச வேண்டும். நாங்கள் பொன்விழா கண்ட கட்சி. திருமாவளவன் எங்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை..
மறைந்த தலைவர்கள் குறித்துதான் மோடி பேசியுள்ளார்.

தமிழகம் வளர்ச்சி பெற எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிதான் காரணம். எதிர் அணியில் இருந்தாலும் அவர்கள் இருவரையும் போற்ற காரணம், அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள்தான். மாநில உரிமையை பாதுகாக்க, நிலை நிறுத்த, உரிய நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற தனி அணியை அமைத்துள்ளோம். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக.

நாடாளுமன்றத்தில் 38 திமுக எம்பிக்கள் இருந்து என்ன பயன்..? தமிழகத்திற்காக ஒரு நாளாவது நாடாளுமன்றத்தை முடக்கி இருப்பார்களா..?மக்களுடைய செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை தேர்தல் மூலமாக மக்கள் உணர்த்துவார்கள். மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அவர்களுடைய எண்ணத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்.

போதை பொருளை தொடர்ந்து திமுக அரசு கட்டுப்படுத்த முடியாமல் திமுக கட்சி நிர்வாகிகள் இதில் ஈடுபட்ட காரணத்தினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் அவர்களை விரைவில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து “மனித சங்கிலி” வருகின்ற 12ஆம் தேதி காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளோம், எனக் கூறியுள்ளார்.

Views: - 97

0

0