மாறன் சொன்னது மறந்து போச்சா..? ஆ.ராசாவை டெபாசிட் இழக்கச் செய்யனும்.. இபிஎஸ் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 2:50 pm
Quick Share

எம்.ஜி.ஆர் குறித்த அவதூறாக பேசிய ஆ.ராசா தன்னை திருத்தி கொள்ள வில்லை என்றால், நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழப்பார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார

எம்ஜிஆர் குறித்த அவதூறாக பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுகவின் பொதுசெயலாளரும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டிருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- எம்.ஜி.ஆர் என்னும் மாமனிதர் உருவாக்கிய கட்சி அதிமுக, சில தலைவர்கள் இருந்தார்கள். ஆனால், நம் தலைவர் மக்களுக்காக வாழ்ந்தவர். அவர் தெய்வப்பிறவி. அதிமுகவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் ஆ.ராசா பேசி வருகிறார். தொண்டர்களின் மனம் காயம்பட்டிருக்கிறது.

தூய மனிதர் எம்.ஜி.ஆர் தொண்டனாக பேசுகிறேன். அவரை நேசிக்கக்கூடிய மக்கள் வெகுண்டெழுந்தால் தாக்குபிடிப்பாரா ராசா…? கலைஞரை கடனில் இருந்து காப்பாற்றியவர் எம்.ஜி.ஆர். எங்கள் தங்கம் படத்தை நடித்துக் கொடுத்ததால் தப்பித்தோம் என மாறன் சொன்னது முரசொலியில் வந்துள்ளது.

1967-ம் ஆண்டு MGR முகம் காட்டித் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ராசா இனிமேலாவது உலருவதை நிறுத்தி விட்டு நல்லதை பேசுங்கள். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்.

அதிமுகவின் 30 ஆண்டுகால ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறி வந்தது. 50 ஆண்டுகால மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில், அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,512 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டு, 90 சதவீதம் முடிந்த நிலையில், 10 சதவீத பணி இரண்டரை ஆண்டுகாலம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதிமுக தொடங்கிய திட்டம் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். கூட்டு குடிநீர் திட்டங்களை திட்டம் போட்டு நிறைவேற்றியது அண்ணா திமுக அரசு, நாம் கொண்டு வந்த திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் நாளை ஸ்டிக்கர் ஒட்டி திறக்கவுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து என்ன திட்டத்தை செய்துள்ளார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகிறார்கள்.

3 ஆண்டுகாலத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தான் திறந்து வருகிறார்கள். திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது அதிமுக அரசு. திமுக அரசு அமைந்தவுடன் கடுமையான மின் கட்டண உயர்வு, இதை கண்டித்து அறவழியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆதரவு அளித்தது. ஆனால் திமுக கண்டுகொள்ளவில்லை. செவுடன் காதில் சங்கு ஊதுவது போல கண்டுகொள்வதில்லை. தொழில் நலிவடைந்து வருகிறது. தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

திருப்பூர் என்றாலே அந்நிய செல்வானியை ஈட்டி தரும் நகருக்கு நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால், திமுக ஒன்றும் செய்யவில்லை. முதல்வர் ஸ்பெயின் சென்றார். 11 நாட்கள் தங்கியிருந்தார். 3 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்தி. ஆனால் அந்த 3 நிறுவனங்களும் தமிழகத்தை சேர்ந்தது.

சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் ஏன் ஒப்பந்தம் போடவில்லை. வெளிநாடு செல்வதற்காக நாடகம் போட்டு சென்றுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு செய்ய போயுள்ளார். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, இவையெல்லாம் முடக்கிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும். 2019, 2021 தேர்தல் அறிக்கையை திமுக நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத் தொகை அதிமுக தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்தால் வழங்கினார்கள். அதுவும் தகுதியின் அடிப்படையில் என மூன்றில் ஒரு பங்கு வழங்கினார்கள்.

திமுகவின் இரட்டை வேடம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்த ராசா நீலகிரியில் டெபாசிட் இழக்க வேண்டும். இது தான் தண்டனை என்பதை உணர்த்த வேண்டும். 40 தொகுதியிலும் நம் கழகம் ஒத்துழைப்போடு, கூட்டணி ஒத்துழைப்போடு வெற்றி பெற வேண்டும். அதற்கான ஆதரவை திரட்ட வேண்டும், என பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம் ஆர் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், பெஞ்சமின், எம் எஸ் எம் ஆனந்தன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 201

0

0